தமிழ் இலக்கியப் பேரவை

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் தமிழ் இலக்கியப் பேரவையும், இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழும் இணைந்து உலகத் தாய்மொழி தினத்தினை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக 21 & 22.02.2022 ஆகிய இரு நாட்கள் விக்கிமூலம் மெய்ப்புப் பார்க்கும் தொடர் தொகுப்பினை (Wikisource Proof Readathon) நடத்தினர். அந்நிகழ்விற்குப் பயிற்றுநர்களாக திருமிகு. தகவலுழவன், விக்கிமீடியர், சேலம் மற்றும் முனைவர். த. சத்தியராஜ், இனம்: முதன்மைப் பதிப்பாசிரியர் அவர்களும் வருகைப் புரிந்தனர். அவர்களின் வழிகாட்டுதலின் படி கவிஞர் வெள்ளியங்காட்டானின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுள் ஒரு கவிஞனின் இதயம் & தமிழன் என்ற இரு கவிதை நூல்களின் 70 பக்கங்களை மாணவியர்கள் மெய்ப்புப் பார்த்தனர்.